முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த விமர்சனம் : நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு இந்திய அரசு கண்டனம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமனம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

விமர்சனம்
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தை மதரீதியாக விமர்சனம் செய்து அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வராக மதவாதி ...
யோகி ஆதித்யநாத்தின் நியமனம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கியமான மாநிலத்தில் இந்துத்துவவாதியை முதல்வராக நியமித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

கடும் கண்டனம்
யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தையும் பிரதமர் மோடியையும் மத ரீதியாக விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் இந்திய அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்