முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து 30-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் முறையின்றி கண்ட இடங்களில் எறியப்படுவதாலும் அவை மக்கும் தன்மை இல்லாததாலும் அவற்றால் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர்களால்      ஈ50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரும் மே-1ம் தேதி முதல் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈ50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடை செய்யப்படவுள்ளது.

ஆகவே, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொது மக்கள் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான துணிகளால் ஆன பைகள் அல்லது நுஉழ-கசநைனெடல டீயபள பயன்படுத்தும் விதமாக இன்று (25.03.2017) ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சி  (ஆலு ளுர்ழுPPஐNபு ஆலு டீயுபு நுஓPழு-2017) துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில்  30-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான துணிகளால் ஆன பைகள் மற்றும்               நுஉழ-கசநைனெடல டீயபள பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் கிளாசிக் போலோ, பாப்கோ கிரீன் வேர், பத்ரா டின்னர்வேர், டேனிராசா பவுண்டேஷன், இயல் வகை, பிரியதர்ஷினி, தி எல்லோ பேக், நீர் குமிழி, கவின் கலை, பேக் மாஸ்டர், அம்ரித் சென்டர், ஸ்மார்ட் ஸ்டிர்Pட் க்லாத் பேக், கார்டு சிறுவாணி, நோ டம்பிங், விமன் ஒன்டர்ஸ், கிரிஸ்டல் பேக்ஸ், ஸ்ரீவாரி காயர்ஸ், ப்ரயாஸ் டிரஸ்ட், நொய்யல் கோ கிரீன், மருதம் நேசுரல் புரோடக்ட்ஸ், கௌமரம் பிரஷாந்தி அகாடமி, இக்கோ கிரீன் யூனிட், அலன்கிரிட்டா கிரியேஷன்ஸ், இபட் எண்டர்பிரைஸஸ், மேக்னஸ் இகோ கான்சப்ட்ஸ், டைமன்ட் ஜுட் டெக்கார்ஸ், பிரபா பேஸ்கட்ஸ், மிக்ஸ்டு இக்கோ புரோடக்ட், ராக் மற்றும் பஃப்பர்  போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.

இக்கண்காட்சியானது இன்று (25.03.2017) மற்றும் நாளை (26.03.2017) இரண்டு நாட்கள் நடைபெறும். ஆகவே, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வணிக நிறுவணங்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை தவறாமல் கண்டு பயனடையுமாறும், இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களான துணிகளால் ஆன பைகள், ஒயர்கூடைகள், காகித பைகள், தானே அழியக்கூடிய மக்கும் பைகள் ஆகியவற்றை பொதுமக்கள் உபயோகப்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், கோவை மாவட்ட முதியோர் நலச்சங்கத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட முதியோர்கள் காகிதத்தால் ஆன பைகளை அவர்களே தயார் செய்து விற்பனை செய்யும் காகித பைகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எம்.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளான வனிதா மோகன், ராக் ரவீந்திரன், கிளாஸிக் போலோ சிவராமன், சாரா நடாஷா, டிம்பில் லூலு, கவிதா, அனிதா, ராதா, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்