முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்கா அலுவலகத்தில் சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான ஆயில் என்ஜின்களை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்கா அலுவலகத்தில்   சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான ஆயில் என்ஜின்களை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   வழங்கினார்.

உதகை ரோஜா பூங்கா அலுவலகத்தில் இன்று (25.03.2017) சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான ஆயில் என்ஜின்களை மாவட்ட கலெக்டர்  வழங்கி பேசியதாவது,

“இந்த உலகிற்கு உயிரையும், உணவையும் தருபவர்கள் விவசாய பெருங்குடிமக்கள்.  ஆதலால்தான் விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்ககாக உயர்த்த, மறைந்த  முன்னாள் முதலமைச்சர்  இரண்டாம் பசுமை புரட்சியை தொடங்கி அதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் காய்கறி பயிர்களின் உற்பத்தியினை பெருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக 50 சதவீதம் மானியத்தில் உயர்விளைச்சல் காய்கறி விதைவிநியோகம், தேயிலை நாற்று விநியோகம், விசைத்தெளிப்பான் விநியோகம், பவர் டில்லர் விநியோகம், மினி டிராக்டர் விநியோகம், ஆயில் என்ஜின் என பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.

அதனால் பயிர் விளைச்சல் அதிகரித்ததோடு கூடுதல் பரப்பால் காய்கறி பயிர்கள் உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் உயர்விளைச்சல் காய்கறிவிதைகள் கடந்த 5 ஆண்டுகளாக ரூ.408.24 இலட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 5 ஆண்டுகளில் 1290 ஆயில் என்ஜின்கள் ரூ.143 இலட்சம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 70 பவர்டில்லர்கள் ரூ.26.50 இலட்சம் மானியத்திலும் 10 மினி டிராக்டர்கள் ரூ.4.00 இலட்சம் மானியத்திலும், 1300 கைத்தெளிப்பான்கள் மற்றும் 100 விசைத் தெளிப்பான்கள் ரூ.20.8 இலட்சம் மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டமானது, சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு இயற்கை வேளாண்மை திட்டம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

          இந்த ஆண்டு விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 50 சதவீதம் மானியத்தில் 400 ஆயில் என்ஜின்கள் சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தில் வழங்க திட்டமிடப்பட்டு இன்றைய தினம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் தோட்டக்கலைத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின்கீழ் பசுமைகுடில் அமைத்தல் காய்கறி பயிர்கள் பரப்பு விரிவாக்கத்திட்டம், பழப்பயிர்கள் பரப்பு விரிவாக்கத்திட்டம், மினி டிராக்டர்கள் விநியோகம், பண்ணை குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் என பல திட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை எல்லாம் முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் பொருளாதாரத்தை பெருக்க பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதேபோல யுஐஆயு மூலமாக பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் உடன் தலைமை வனபாதுகாவலர் மற்றும் சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்