முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ராஜ்பவன் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ராஜ்பவன் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஊட்டி ராஜ்பவன் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ குப்பனேஸ்வரர், ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பஜனையுடன், சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்பின்னர் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லப்படும். இந்த நிலையில் பங்குனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் மற்றும் அமாவாசை தினத்தன்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களின் குறைகளுக்கு சனீஸ்வர பகவான் அருள்வாக்கு சொல்லி தீர்த்து வைக்கிறார். நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததுடன் தங்களது குறைகளை சுவாமியிடம் எடுத்துக்கூறி நிவாரணம் பெற்றனர். இச்சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் ராஜப்பா, மணி பூசாரி, மணிகண்டன் உட்பட பலர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்