முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு முகாமில் 575 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பணிநியமன ஆணை: அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்கள்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாலாஜா. ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களை சார்ந்த படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு கலெக்டர் சி.அ.ராமன்,  தலைமை வகித்தார்.இம்முகாமில் கலந்து கொண்டு வேலை நியமனம் பெற்ற  இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்கள். இதனை தொடர்ந்து புதுவாழ்வு திட்ட துறையின் மூலம் 153 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.4 கோடியே 45 இலட்சத்து 6 ஆயிரத்து 500 மதிப்பிலான சுழல் நிதி கடனுதவி தொகையினையும், மாவட்ட கலால் துறையின் மூலம் கள்ளச்சாராயம் விற்று வந்து சிறைசென்று தற்போது விடுதலை பெற்று மனம் திருந்தி வாழும் 13 நபர்களுக்கு அவர்களின் வாழ்க்கை பொருளாதாரத்திற்காக ரூ.30 ஆயிரம் மதிப்புடைய ஒரு கறவை மாடுகள் வீதம் மொத்தம் 3 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.5.500 மதிப்புடைய சக்கர நாற்காலிகளையும் ஆக மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 44 இலட்சத்து 6ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சிவராமன்  வரவேற்புரை ஆற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில்  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர்  பேசியதாவது:- மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 3315 வேலைதேடி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பதிவு செய்து அதில் 575 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில் பிரபலமான 32 நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளன.  மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் வேகமாக பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இல்லாமல் இருக்க கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்  மறைந்த தமிழக முதல்வர் அம்மா  கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் அரசு வேலையை மட்டுமே எதிர்பாத்தில்லாமல் இளைஞர்கள் தனியார் துறையின் வேலைவாய்ப்பை பெற்று தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு நடத்திட ஆணையிட்டு ஆண்டுதோறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும்நடத்தப்பட்டு இளைஞர்கள் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.  மேலும் இவ்வியக்கத்தின் மூலம் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கோடு நமது மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 32 நிறுவனங்கள் வழியாக 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமோ, பல்வேறு தொழில் பிரிவு பட்டதாரிகள், தொழில் பழகுநர், தொழில் நுட்ப கல்வி பயின்றவர்கள், பட்டப்படிப்பு பயின்றவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிட இதுவரையில் 3315 நபர்களுக்கு மேலாக பதிவு செய்து கொண்டு கலந்துக்கொண்டதில் 575 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமண ஆணை வழங்கப்படுகிறது இது போன்று நல்ல பல அரிய வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் மறைந்த  தமிழக முதல்வர் அம்மா . இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற இயலாமல் போனவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் வருங்காலங்களில் நடைபெறும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டுமெனவும் மேலும் இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை பெறும் மகளிர் சுய உதவி குழக்களை சார்ந்த பெண்கள் உதவிகளை பெற்று மென்மேலும் தங்கள் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டுமெனவம்,  சிறைச்சாலைகள் என்பது தண்டனை கூடங்களாக இல்லாமல் திருந்தி வாழ்வதற்கான பயிற்சி கூடம் என்பதை நிறுபிக்கும் வகையில் மாவட்ட கலால் துறையின் மூலம் கள்ளச்சாராயம் விற்று வந்து சிறைசென்று தற்போது விடுதலை பெற்று மனம் திருந்தி வாழும் 13 நபர்களுக்கு  சுயமாக சம்பாதித்து வாழ்க்கை வாழும் வகையில் கறவை மாடுகள் மற்றும் சுயதொழில் நிதியுதவிகள் வழங்கப்படுகிறது இவ்வாறு மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக  மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு இருந்து வரும் என்று  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி  பேசினார்.இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கோபி  நன்றியுரையாற்றினார்கள்.இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), இராணிப்பேட்டை கோட்டாட்சியர் ராஐலட்சுமி, புதுவாழ்வு திட்ட மேலாளர் சம்பத்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, உதவி ஆணையர் கலால் (பொ) அப்துல் முனீர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முகமதுஜான், வி.கே.ஆர்.சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டபிள்யு.ஜி.மோகன், மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை விற்பனை தலைவர் டி.ராஐh,ஆவின் தலைவர் த.வேலழகன், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்