முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வுக்கான பாடுபட முன்வரவேண்டும்: நடிகர் குரு சோமசுந்தரம் பேச்சு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

மாணவர்கள் சமுதாயம் விழிப்புணர்வுக்காக பாடுபட முன்வரவேண்டுமென்று திருவண்ணாமலை எஸ்கேபிபொறியியல் கல்லூரி யில் நடந்த ஆண்டு  ழாவில் நடிகர் குருசோமசுந்தரம் கூறினார். திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா ‘சங்கமம் 2017’ கலைநிகழ்ச்சியுடன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்த அனைவரையும் முதல்வர் வெ.சுப்பிரமணியபாரதி வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் எஸ்கேபி கருணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் திருவண்ணாமலை ஆன்மீக மக்களை ஈர்க்கும் பூமி என்றும் தற்போது கலைஞர்களை ஈர்க்கும் பூமியாக மாறிவிட்டதால் திரைப்பட நடிகர் குருசோம சுந்தரம் இங்கே தங்கி ரேஷன்கார்டு பெற்றுவிட்டார அதேபோல் இயக்குநர் ராஜீ முருகன் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளார். தமிழ் கலைஞர்களை பெருமைப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றுபரிசுகளை பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட நடிகர் குருசோமசுசுந்தரம் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசுகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது ஒருமுறைகூட தான் மேடை ஏறியதில்லை எனவும் இந்த மேடையில் நிற்பது பெருமையாக உள்ளது மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வுக்காக பாடுபட முன்வரவேண்டும் இங்கு மாணவர்கள் நடத்திய நாடகம் மிக சிறப்பாக இருந்தது. மேலும் பாராட்டக்கூடியது வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை மாணவர்கள் திறமை வெளிப்பட்டுள்ளது. இங்கு போட்டிகளில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகள் பரிசுபெற்றது வரவேற்கத்தக்கது என்றார். இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் ராஜிமுருகன் உள்பட பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்னடர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்