முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயம் திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ஆய்ரா அகர்வால், இயக்குனர், கண்ணன் ரங்கசுவாமி, இசை சதிஷ் செல்வம், ஓளிப்பதிவு பாக்கியராஜ் ஏ, ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8 பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார்.

அந்த அறைக்குள் அவர்கள் 1 மணி நேரம் இருக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்திற்கு பிறகு யார் உயிரோடு இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த கம்பெனிக்கு தலைமை அதிகாரி என்றும் கூறிவிட்டு, அறைக் கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது. ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது.

அப்படியிருக்கையில், அந்த அறைக்குள் இருந்து யார் உயிரோடு வெளியே வந்தார். அந்த அறைக்குள் அவர்களுக்குள் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸோடு சொல்லும் கதையே தாயம். 8 பேரை கொன்றால்தான் அந்த வேலை கிடைக்குமா? அப்படியென்ன அந்த பதவிக்கு மவுசு இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்சில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், கிளைமாக்சில் 7 பேரை கொன்றுவிட்டு, ஒருவர் வெளியே வருவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

ஆங்கில படங்களில் இதுபோன்ற படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. அதேநேரத்தில் ரசிக்கவும் வைத்துள்ளனர். அதைபோல் இந்த படத்தையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. இதற்காக, எண்டர்டெயின்மெண்டே இல்லாமல் திரில்லிங்காக கொண்டு போயிருந்தாலும், அதை ரசிக்கும்படியாக எடுக்க தவறியிருக்கிறார்.


படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுவதுபோல், அவர்களுக்கென்று தனித்தனி குணாதிசயங்கள் கொடுத்திருந்தாலும், காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இல்லை. கடைசியில், அவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைதான் என்று சொல்லி முடித்திருக்கிறார். ஆனால், அதை சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார்.

இதனால், படத்தை பார்க்கும் நமக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.ஒரு அறைக்குள்ளே நடக்கக்கூடிய சம்பவத்தை, ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டிருக்கவேண்டும். அதை அவர், பொறுப்புடன் கையாளவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்வதால், படத்தின் இசையும் பெரிதாக ரசிக்கும்படி இல்லை. மற்றபடி ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.மொத்தத்தில் ‘தாயம்’ காயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago