முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக காசநோய் விழிப்புணர்வு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

  ஒட்டன்சத்திரம்.-திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவக்கழகம் கிளை மற்றும் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக வடகாடு ஊராட்;சி கண்ணணூரில் உலக காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர்  சேக்தாவூத், செயற்குழு உறுப்;பினர் எம்.இஸ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டி.ஹெரால்டுஜாக்சன் வரவேற்று பேசினார்.

இம்முகாமில் டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி கலந்து கொண்டு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடைய வினாடி-வினா விழிப்புணர்வு போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார். மேலும் வடகாடு ஊராட்சி, புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு, பெத்தேல்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள்; வழங்கப்பட்டது. இம்முகாமில் திண்டுக்கல் ரீடு தொண்டு நிறுவன மருத்துவக்குழுவினர், ஒட்டன்சத்திரம் துளசி பார்மசி குழுவினர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்