முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் மழை மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபாரசக்தி வழிபாட்டு மன்றத்தில் பங்காரு அடிகளார் 77வது அவதார திருநாளை முன்னிட்டு மழை மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையின் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் தணியவும், மழை வளம் பெருகவும், மக்கள் மனித நேயத்துடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டி 11 கலச விளக்கு பூஜை மற்றும் தொடர் வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளை கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் முருகவேல் தொடங்கி வைத்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் முழங்க கலச பூஜை செய்தனர். இதில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் தாசில்தார் வள்ளிக்கண்ணு, அரசு தலைமை மருத்துவமனை கண்மருத்துவர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்டத்தலைவர் அய்யாச்சாமி, பொருளாளர் வடிவேல், மன்ற தலைவர் அப்பசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் வரதராஜன், சுகுணா ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்