முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மழை பெய்திடவேண்டி ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிறப்பு யாக வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சித்தர் அவதாரத் திருநாள் விழாவும், தமிழகத்தில் மழை பெய்திடவேண்டி சிறப்பு யாக வழிபாடுகளும் நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் கோவிலில் தென்தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சிலைகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடந்து வருகிறது.சித்தர் பீடத்தில், உலகமக்கள் அனைவரும் நோய்கள் இன்றி, நலமாக&வளமாக வாழவேண்டியும், தமிழகத்தில் நல்லமழை பெய்து பசுமைவளம் சிறக்கவேண்டியும், குடிநீர் தட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கிடவேண்டியும், தற்போது நிலவிவரும் கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்திடவேண்டியும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகளும், சித்தர் அவதார திருநாள் விழாவும் நடைபெற்றது. யாக வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் மிளகாய், எலுமிச்¬டிசப்பழம், மிளகாய் வற்றல், மிளகு மற்றும் நவதானியங்களுடன் கூடிய சிறப்பு யாகத்தை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 16 அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகளுடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது.வழிபாடுகளைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாம், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்புயாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் விழாக் கமிட்டியினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்