முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜெட்லி தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2000 முதல் 2013 வரை அருண் ஜெட்லி பணியாற்றினார். அப்போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றதாக அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

ரூ.10 கோடி இழப்பீடு  வேண்டும்

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அசுதோஷ், குமார் விஷ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் பாஜ்பாய் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜெட்லி கோரியுள்ளார்.

இந்த வழக்கு பெருநகர மாஜிஸ்திரேட் சுமித் தாஸ் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் ஜெட்லி, கெஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கெஜ்ரிவால் உட்பட 6 பேர் மீதும் மாஜிஸ் திரேட் சுமித்தாஸ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை மே 20-ம் தேதி தொடங்கும் என்று மாஜிஸ்திரேட் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்