முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் கேர் மருத்துவ காப்பீடு மசோதா வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘டிரம்ப் கேர்’ மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வின் ஜனநாயக கட்சி ஆட்சிக் காலத்தின்போது 2010 மார்ச் 23-ம் தேதி ‘ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அமல் செய்யப் பட்டது. இத்திட்டத்தால் மக்களின் பணம் பறிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவ தாக குடியரசு கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

டிரம்ப் கேர் அமல்

கடந்த ஜனவரி 20-ம் தேதி ஜனநாயக கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து ‘ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்துவிட்டு அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டம் (டிரம்ப் கேர்) அமல் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

அதன்படி ‘டிரம்ப் கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் நேற்றுமுன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சபையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 235 பேர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள்.

‘டிரம்ப் கேர்’ மருத்துவக் காப்பீடு மசோதாவை நிறைவேற்ற 215 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் மசோதா தொடர்பான விவாதத்தின்போது ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு எழுந்தது.

பெரும்பான்மை ஆதரவு இல்லை

‘டிரம்ப் கேர்’ திட்டத்தை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர். இதனால் மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.

எனவே வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதிபர் டிரம்பின் அறிவுரைப்படி மசோதாவை வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்