முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் பகுதியில் யுகாதி பண்டிகையையட்டி செண்டுமல்லி விலை ஏற்றம் :விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

ஓசூர் பகுதியில் விவசாயிகள் பலர் செண்டுமல்லி பூ விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பூ தற்போது விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,தேன்கனிக்கோட்டை தாலுக பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் செண்டு மல்லி பூ விவசாயம் செய்து வருகின்றனர். இது 3 மாத பயிர் செடி ஒன்று ரூ 10 முதல் 15 வரை விற்பனையாகிறது. நல்ல விளைச்சலான விவசாயம் என்றாலும் சில மாதங்கள் ஆந்திர,கர்நாடக மாநிலத்திலுருந்தும் விவாசாயிகள் பூ இந்த பகுதிக்கு அனுப்புவதால் விலை வீழ்ச்சி அடைகிறது. தற்போது யுகாதி பண்டிகை முன்னிட்டு விலை அதிகரித்துள்ளது.மேலும் முகூர்த்த நாட்கள், விசேச நாட்கள் உள்ளதாலும் இந்த பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இது ஒரு ஏக்கரில் பயிரிட ரு 1 லட்சம் வரை செலவாகிறது. கூடுதலான மகசூல் கிடைக்கும் போது விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலாக இருக்கும். கூடுதலான விலை என்றால் விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும். விசேஷ நாட்களில் கிலோ ரூ60 முதல் ரு 80 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ பூ ரூ 40 முதல் ரூ 50 வரை விற்ப்பனையாகிறது. இதனால் நல்லா விலையாக உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறும் போது: இந்த பகுதியில் தட்ப வெப்ப நிலை சீராக உள்ளதாலும், மண்ணின் தன்மை அனைத்து விவசாய பயிர்களுக்கு ஏற்றவாறு உள்ளதால் பூ விவசாயம் அனைவரும் செய்து வருகின்றனர். ரோஜா மலர்களை வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. செண்டு மல்லி பூ உள்நாட்டில் விற்பனையாகிறது.இந்த பூக்களை தமிழ் நாட்டில் கோவை,மதுரை,திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்