முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலானது 24 ஏக்கர் பரப்பளவில் 9 கோபுரங்களையும், 4 நுழைவு வாயில்களையும், 2 புண்ணிய தீர்த்தங்களையும், 5 பிரகாரங்களையும், 5 அதிகார நந்திகளையும், 1000 கால் மண்டபங்களையும் கொண்ட பழமை வாய்ந்த திருக்கோவிலாகும்.பஞ்சபூத ஸ்;தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக திருவிழா கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனவரி 31ம் தேதி முதல் பல்வேறு கால யாக பூஜைகளுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுது.அண்ணாமலையார் கோவிலின் 5ம் பிகாரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாக சாலையில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், விநாயகர், முருகர் என அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனியாக 128 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 128 யாக குண்டங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், சிறந்த 16 ஓதுவார்களை கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றுது.இந்த யாக பூஜைகளில் 108 மூலிகைகள், 108 விதமான ஓம திரவியங்கள், அனைத்து விதமான பூஜை பொருட்கள், பழ வகைள், அபிஷேகப் பொருட்கள் என பல்வேறு விதமான யாக பொருட்கள் தமிழகம் மட்டும் இன்றி கேரளா, ஒரிசா போன்ற பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக நிறைவு தினமான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி யாகம் அண்ணாமலையார் கருவரை முன்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த யாகத்தில் 108 வலம்புரி சங்குகள், 33 கலசங்கள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியாகள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மற்றும் கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மகாகும்பாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் இந்த மண்டல அபிஷேக பூஜையின் நிறைவுவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணியளவில் அலங்கார ரூபத்தில் விநாகயர் சந்திரசேகரர் மாடவீதி யில் பவணிவநற்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . கோவிலில் பக்தர்களின் அலைமோதியதால் அமர்வு தரிசனம் , சிறப்ப தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்