முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி துணை மசோதாக்கள் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை திருத்த மசோதாக்கள் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு திருத்த மசோதாக்கள் சி-ஜி.எஸ்.டி,1ஜி.எஸ்.டி,யுடி ஜி.எஸ்.டி மற்றும் நஷ்டஈடு வழங்கும் வகை செய்யும் திருத்த மசோதாக்கள் இன்று பாராளுமன்ற லோக்சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த திருத்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  எக்சைஸ் மற்றும் சுங்கவரி விதிப்பில் பலமுறையை ஒழிக்க வகை செய்யும் மசோதா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்யும் முறையிலும் திருத்தம் கொண்டுவந்து ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வரும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதாக்கள் மீது எவ்வளவு நேரம் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து லோக்சபை அலுவலக கமிட்டி முடிவு செய்யும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜிஎஸ்.டி மசோதாவை வரும் 29-ம் தேதி அல்லது 30-ம் தேதிக்குள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

பின்னர் ராஜ்யசபையில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். அங்கு ஏதாவது திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய அந்த மசோதாக்கள் மீண்டும் லோக்சபையில் தாக்கல் செய்யப்படும். இந்த திருத்தங்களை லோக்சபை ஏற்றுக்கொண்டாலும் கொள்ளும். இல்லாவிட்டாலும் விட்டுவிடும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்