முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை மின்விளக்கு பற்றி ஒ.பி.எஸ் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர் ,இன்னொரு திரு விளக்கு ஜெயலலிதா என்று தங்களுக்கு அளிக்கப்பட்ட சின்னம் குறித்து ஒ.பி.எஸ் விளக்கமளித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். அவரது தலைமை தேர்தல் அலுவலகம், தண்டையார்பேட்டை கோதண்டராமர் தெருவில் உள்ள அவரது வீட்டருகே அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்தார். வேட்பாளர் மதுசூதனனின் தேர்தல் அலுவலகத்தின் பூமி பூஜையில் பங்கேற்றார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த தொகுதியில் எங்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்கு பதிலாக இரட்டை மின் விளக்கு கிடைத்ததால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களின் எண்ணம் தெளிவாக உள்ளது. தேர்தல் முறையாக நடக்க வேண்டும். வாக்கு சீட்டோ, மின்னணு ஓட்டுப்பதிவோ எதுவாக இருந்தாலும் மக்கள் எங்களுக்குதான் வாக்களிப்பார்கள். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர். என்னும் ஒளிவிளக்கு. இன்னொரு விளக்கு ஜெயலலிதா என்ற திருவிளக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்