முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா தனது கருத்தை யார் மீதும் திணிக்காது: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியா தனது கருத்தை யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் உள்ள மெளவுண்ட் அபுவில் பிரம்ம குமாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில் இந்தியா தனது கருத்தை யார் மீதும் வலுக்கட்டாயமாக ஒருபோதும் திணிக்காது. இந்தியாவானது பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரீகத்தையும் உள்ளடக்கி சிறப்பாக திகழும் நாடாகும். இந்தியாவின் மையக்கருத்தே கடவுள் ஒருவர்தான் என்பது என்றார். இந்தியாவில் உள்ள இந்துக்கள், முஸ்லீம்கள்,பாசிஸ் இன மக்களுக்கு கடவுள் வேறுபட்டவர் அல்ல.  பல தரப்பட்ட மக்கள் பலவிதமாக கடவுளை குறிப்பிடலாம். ஆனால் இந்தியாவின் மையக்கருத்து கடவுள் ஒருவரே.

இந்தமாதிரியான நாட்டில் வாழும் நாம், நம்புடைய கருத்தை மற்றொருவர் மீது திணிக்கமாட்டோம். அறிவுக்கு அளவே இல்லை என்பதை நாம் போன்றவர்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அறிவுக்கு  நேர காலம் கிடையாது. அதை எதையாலும் கட்டுப்படுத்த முடியாது. அறிவுக்கு விசாவோ, பாஸ்போர்ட்டோ தேவையில்லை என்றும் பிரதமர் கூறினார்.

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் பாரம்பரியமாகும். விறகு போன்ற எரிபொருளை நம்பி  இருப்பதை குறைக்க எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூரிய சக்தி போன்ற மறுசுழற்சி எரிபொருளை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். உலக வெப்பமயமாகுவது பெரும் சவாலாக உருவாகி உள்ளது. அதனால் வரும் 2030-ம் ஆண்டுக்குள் 40 சதவீதம் அளவுக்கு மறுசுழற்சி எரிபொருளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இந்தியா உறுதிபூண்டுள்ளது. வரும் 2020-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் . புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் 175 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மோடி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்