முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : தர்மசாலாவில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி  2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல், புஜாரா அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலிய வீரர் லயன் சிறப்பான பந்து வீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4-வது டெஸ்ட்

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 3–வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கியது.

300 ரன்களுக்கு அவுட்

இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் டெஸ்டாக இது அமைந்திருப்பால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்திய அணியில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீளாத கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்டில் ஆடவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய பேட்டிங் செய்து விளையாடியது. இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 88.3 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

நிதான ஆட்டம்

இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கி நிதானமாக ஆடியது. முதல்நாளில் இந்தியா பந்துவீச்சில் மிரட்டல் காட்டியது போன்று நேற்று ஆஸ்திரேலியாவும் பதிலடி கொடுத்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடி ரன்சேர்த்தனர். தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுலை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சால் இருவரையும் மிரட்டினார்கள்.

முரளி விஜய் அவுட்

ஸ்விங், சீம், பவுன்ஸ் என தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்கள். இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ராகுல் அரைசதம்

அடுத்து புஜாரா களம் இறங்கினார். ராகுல், புஜாரா ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்திய அணி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. ராகுல் 31 ரன்னுடனும், புஜாரா 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், இருவரும் ரன்குவிக்க தொடங்கினார்கள். லோகேஷ் ராகுல் 98 பந்தில் அரைசதம் அடித்தார்.  இருதரப்புக்கும் சரியான போட்டியுடன் ஆட்டம் நகர்ந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் லயன் ரன் கணக்கை அதிகரிக்க செய்த இந்தியாவின் நகர்வுக்கு முட்டுக்கட்டையிட்டார். தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 60 ரன்கள் எடுத்து கம்மிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

புஜாரா அரைசதம்

அப்போது இந்தியா 40.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. புஜாரா 132 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய தேனீர் இடைவேளை வரை வி்க்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

லயன் அபாரம்

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் லயன் புஜாரா, ரெகானே, கருண் நாயர், அஸ்வின் ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணியை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிஉள்ளார். தேனீர் இடைவேளை முடிந்தபின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. புஜாரா (57), கருண் நாயர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 49 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரகானே 46 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

52 ரன்கள் பின்தங்கி ....

இந்திய அணியிலும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 91 ஓவர்களை எதிர்க்கொண்ட இந்தியா நேற்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 248 ரன்களை எடுத்து உள்ளது. சஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி 52 ரன்கள் பின்தங்கி உள்ளது.

வாய்ப்புள்ளது ...

தற்போது வரை இந்தியா ஆஸ்திரேலியாவை விட 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் உள்ளன. இன்று 3-வது நாள் ஆட்டத்தில் சகா - ஜடேஜா ஜோடி 300 ரன்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினால், இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago