முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை கடந்த ஜடேஜா !

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : தர்மசாலா டெஸ்டில் 15 ரன்களை எட்டியபோது 30-வது டெஸ்ட் போட்டியில் 1000 ரன்னைக் கடந்தார் சுழற்பந்து ஆல்ரவுண்டர் வீச்சாளர் ஜடேஜா.
1000 ரன்னைக் கடந்தார்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான நேற்று இந்தியா பேட்டிங் செய்தது. 6 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் 7-வது விக்கெட்டுக்கு சகாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. இவர் நாதன் லயனின் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அந்த சிக்ஸ் உடன் முதல் இன்னிங்சில் 15 ரன்னைத் தொட்டார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டிக்கு முன்பு 29 டெஸ்டில் 988 ரன்கள் எத்திருந்தார். 9 ரன்னில் இருந்து சிக்ஸ் அடித்ததன் மூலம் 15 ரன்னாகி 1000 ரன்னைக் கடந்தார்.

2012-ல் அறிமுகம் ...

28 வயதாகும் ஜடேஜா 2012-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். போட்டி டிராவில் முடிந்தது. தற்போது இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வளம் வருகிறார். 30 போட்டியில் 139 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்