முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் மருத்துவமனைகள் கட்டிய அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி !

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

காத்மண்டு : அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி நேபாளத்தில் சுகாதார மையங்கள் கட்டியுள்ளார்.

சுகாதார மையங்கள்

நேபாளத்தில்  கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நேபாளத்தில், சுகாதார மையங்கள் அமைக்க யுனிசெப் அமைப்புடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

மெஸ்ஸி நிதியுதவியுடன் ...

இந்நிலையில், யுனிசெப் அமைப்புடன் இணைந்து அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் மெஸ்ஸி, நேபாளத்தில் 14 சுகாதார மையங்கள் கட்டுகிறார். மொத்தம் 74 சுகாதார மையங்கள் கட்ட யுனிசெப் ஒப்பந்தமிட்டது. இதில் மெஸ்ஸி 3 சுகாதார மையம் கட்டியுள்ளார். மேலும் 11 மையங்கள் கட்டப்பட்டு வருவதாக மெஸ்ஸி பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. நேபாள நாட்டில் மெஸ்ஸி பவுண்டேஷன் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார மையங்கள் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக யுனிசெப் அமைப்பின் நல தூதர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago