முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதரவற்ற குழந்தைகளுக்க பராமரிப்பு நிதி - கலெக்டர் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 8 குழந்தைகளுக்கு ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.  

அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்புத் துறையின் சார்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் 8 நபர்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.2ஆயிரம் பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக சட்டம் பயின்ற தாழ்த்தப்பட்ட சட்ட பட்டதாரிகள் 3 நபர்களுக்கு  சுயமாக தொழில் துவங்க உதவித்தொகையாக தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சத்திற்;கான காசோலைகளையும், மீன்வளத்துறையின் சார்பாக மீனவர்கள் குழு விபத்து காப்புறுதி நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் 10.02.2015 அன்று மீன்பிடிக்க சென்ற பொழுது கடலில் தவறி விழுந்து மரணமடைந்த மீனவர் திரு.க.ஜெயசிங் என்பவரது மனைவி திருமதி.ஜெ.முருகலெட்சுமி-க்கு விபத்து காப்புறுதி நிவாரணத்தொகையாக ரூ.2லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்;ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) ப.முருகானந்தம்,  மீன்வளத்துறை துணை இயக்குநர் பா.ஐசக் ஜெயக்குமார், உதவி இயக்குநர் சோ.கொளஞ்சிநாதன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago