முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுவை கொல்பவர்களின் கை, கால்களை உடைப்பேன் : உ.பி. பாரதிய ஜனதா எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தில் பசுவதை கூடங்களை மூடுவதற்கு செயல் திட்டம் வகுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வெளிமாநிலங்களுக்குப் பசு கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சட்ட விரோதமாக நடக்கும் பசுவதைக் கூடங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கலவரத்துக்கு காரணமான எம்.எல்.ஏ.
இந்நிலையில், முசாபர்நகரில் கடந்த வராம் மாநில அமைச்சர் சுரேஷ் ரானாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந் நிகழ்ச்சியில் கடாவ்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி பேசியபோது,  ‘‘வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே சொல்ல தயங்குபவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன். அதேபோல் பசுக்களைக் கொல்பவர்களையும் அவற்றை மதிக்காதவர்களின் கை, கால்களையும் உடைப்பேன். பசுக்களைத் தங்கள் தாய் போல மதித்து போற்ற வேண்டும். அப்படி செய்யாதவர்களின் கை, கால்களை உடைப்பேன். இதை நிறைவேற்ற எங்களிடம் இளைஞர் படை உள்ளது’’ என்றார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முசாபர் நகரில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக விக்ரம் சய்னி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago