சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்த சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தித்தர வேண்டும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு சட்டப்பேரவையில் கோரிக்கை

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      கடலூர்

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் அ.பிரபு கன்னிப் பேச்சில் சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்தவும் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தித்தர பேரவைத் தலைவரை கேட்டுக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் மன்னைவிட்டு மறைந்தாலூம் மக்கள் மனதை விட்டு மறையாத செயல் திட்டங்களால் இடம் பிடித்து வருகின்றார். அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கியும், கழகப் பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர், முதல்வர் மற்றும் தாய் நத்தையரை பணிந்தும் இம் மாமன்றத்தில் அமர வைத்து அழகு பார்த்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் வணங்கி பேச்சைத் துவங்கினார். 2017-2018ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் சிலவற்றை மற்றும் குறிப்பிட விரும்புகிறேன். முதல்வர் பொறுப்பேற்ற பிறகு ஜெவின் வழியிலேயே செயல் பட்டு வருகின்றது. மகப்பேறு காலத்தில் வழங்கப்படுகின்ற நிதியுதவினை உயர்த்தி ரூ.18ஆயிரம் வழங்கப்படும் என்ற உறுதியையையும், 500 டாஸ்மாக் கடைகளை மூடி படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 500 கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். படித்து வேலைக்கு செல்கின்ற பெண்களை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீதமத் மானியத்தில் ஸ்கூட்டி வழங்கவும் அல்லது 20 ஆயிரம் உதவித்தொகை வழங்கவும் ஆணையிட்டுள்ளார். வேலையற்ற இளைஞர்களுக்கு உவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்திட்டும் மீனவர்களுக்கு 5000 வீடுகள் கட்டவும் ஆணையிட்டுள்ளார். சுகாதார துறைக்கென 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்ட ஆரம்ப சுகாதர நிலையங்களாக தரம் உயர்திடவும், 96 பல்நோக்கு சிகிச்சை மையம் அமைக்கவும், முதலமைச்சர் விரிவாக்க காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 312 சிகிச்சைகளை சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கவும் , சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.2 இலட்சமாக காப்பீட்டு அளவு உயர்த்தப்படவும், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிஉதவியை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்திடவும், நகர்ப்புற மருத்துவ கட்டமைப்புத் திட்டத்திற்காகவும் 10 இடங்களில் மருந்து விற்பனைக் கடைகள் அமைக்கவும் மற்ற பல்வேறு திட்டங்களுக்காக மருத்துவத்துறைக்கு மட்டும் ரூ.10.158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், 100 அரசு உயர்நிலை பள்ளிகளை தரமுயர்த்தவும் ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள், புத்தகங்கள், காலணிகள், பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச பேருந்து சலுகைகள், மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கவும், இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.5ஆயிரம் வழங்கவும், 12,524 ஊராட்சிகளிலே விளையாட்டு போட்டிகள் நடத்திடவும், ஏழைக் குழந்தைகள் கல்வி திட்டத்திற்கும் பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் மற்றும் உயர் கல்விக்கு சேர்த்து மொத்தம் ரூ.30612 கோடி ஒதுக்கீடு செய்தது மிகப் பெரிய சாதனையாகும். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு 2017-2018ம் ஆண்டிற்கான விவசாயிகளின் பயிர்க்கடனை வழங்க ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்த சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க 8 ஆயிரத்து 538 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் பாதுகாபாப்பு திட்டத்தின்கீழ் இயற்கை மரணம் அடையும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக இருந்த ரூ.10 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியது வரவேற்கத்தக்கதாகும். பயிர்க் காப்பீட்டு மானியம் வழங்கவும், ஒரு லட்சம் ஏக்கர் நுண்ணீர் பாசனம் செய்வதற்கும் மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள், நாட்டிலே அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தன் தூக்கத்தையும், குடும்பத்தையும் மறந்துவிட்டு இந்த நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் காவலர்கள். காவலர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு புதிதாக 3000 வீடுகள் கட்ட ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது அரசு. இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளிக்கும் வகையிலே தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு 10,500 நபர்கள் தேர்வு செய்யப்டும் என்று அரசு கூறியுள்ளது என்பது இளைஞர்கள் மத்தியிலே மிக மிக வரவேற்க்கத்தக்க ஒன்றாகும். கிராமப்புறத்திலே வாழும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவைகள் மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்கள் வழங்கவும், 6 லட்சம் ஆடுகள் வழங்கவும் ரூ.182 கோடி அரசு ஒதுக்கி உள்ளது. ஒரு இலட்சம் உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. இந்த தொகைகளை அனைத்துத் துறைகளுக்கும் ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியிலே அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்றத்திலே ஒன்றை பதிவு செய்ய கடமைபட்டிருக்கிறேன். இரண்டு கோடி ரூபாயக இருக்கும் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினை ரூ.5 கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டுமென்று தங்களை கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நியாய விலைக் கடைகளிலே மக்கள் பொருட்களை வாங்கச் செல்லும் போது வெய்யலிலே நிற்கின்றனர் இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: