முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்தீப் யாதவுக்கு ஆஸி. முன்னாள் வீரர் வார்னே பாராட்டு

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : மணிக்கட்டு சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவ் பந்து வீச்சில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவருக்கு நான் எப்போதுமே ஆலோசனை அளிக்க தயாராக இருக்கிறேன் என ஷேன் வார்னே பாராட்டி உள்ளார்.

குல்தீப் அறிமுகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அறிமுகம் ஆனார். கான்பூரை சேர்ந்த 22 வயதான அவர் முதல் டெஸ்டில் 68 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இடது கை சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவின் பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது.

வார்னே காரணம்

தனது சிறப்பான பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் வார்னேயின் ஆலோசனை காரணமாக இருந்தது என்று குல்தீப் யாதவ் குறிப்பிட்டார். வார்னேயிடம் இருந்து கற்றுக்கொண்ட வித்தை மிகவும் பலன் அளித்ததாகவும் அவர் கூறினார்.

தயாராக இருக்கிறேன்

இந்த நிலையில் குல்தீப் யாதவுக்கு வார்னே பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:-

என்னிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கம் குறித்து அறிந்த விவரத்தை குல்தீப் யாதவ் தெரிவித்து இருந்தார். எனது மாணவனின் பந்துவீச்சு மகிழ்ச்சி அளித்தது. மணிக்கட்டு சுழற்பந்து வீரரான அவர் தனது பந்து வீச்சில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இது நீண்ட காலம் தொடர வேண்டும். அவருக்கு நான் எப்போதுமே ஆலோசனை அளிக்க தயாராக இருக்கிறேன். எந்த நாட்டு சுழற்பந்து வீரராக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்