முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வரும் அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 நாடுகள் ...

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான தயாரிப்பு பணிகளில் சர்வதேச அணிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.

இறுதிப்போட்டி

இந்நிலையில் பிபாவின் 21 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது, இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும்  மைதானங்களை ஆய்வு செய்தது. டெல்லி, கோவா, கொச்சி, நவி மும்பை, கவுகாத்தி ஆகிய 5 மைதானங்களை ஆய்வு செய்த பின்னர், கடைசியாக நேற்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது, கொல்கத்தா மைதானம் அவர்களுக்கு திருப்தி அளித்துள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என போட்டி இயக்குனர் ஜேவியர் செப்பி அறிவித்துள்ளார்.

6 லீக் ஆட்டங்கள்

மேலும், இந்த மைதானத்தில் 6 லீக் ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரு ஆட்டம், காலிறுதியில் ஒரு ஆட்டம், மூன்றாம் இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 10 போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். துவக்க ஆட்டம் அக்டோபர் 6-ம் தேதி நவி மும்பையில் நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் கவுகாத்தியிலும், நவி மும்பையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago