தி.மலை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo06

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 782 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் அவர்கள் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் எஸ்.கோகுலவாசன் (எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி), சி.திவாகர் (சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி), பி.ரேணுகா (சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி), ஏ.யோகிதா (மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: