முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாஇ மாற்றுதிறனாளிகளுக்கு உதவிஇ முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 517 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர்; அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 32 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பேருந்துப் பயண சலுகை அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலர் செந்தில்குமாரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக(வேலூர்) பொது மேலாளர் ரமேஷ், துணை மேலாளர் கலைச்செல்வன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago