நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மற்றும் நாலெட்ஜ் மேலாண்மை கல்லூரி வேலைவாய்ப்பு தினம்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      சேலம்
slm a

சேலம் நாலெட்ஜ் கல்லூரி வளாகத்தில் நாலெட்ஜ் கல்வி குழுமத்தின் வேலைவாய்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். இவ்விழாவில் இக்கல்வியாண்டில் நாலெட்ஜ் கல்லூரி மற்றும் நாலெட்ஜ் மேலாண்மை கல்லூரி நடைபெற்ற வளாகத் தேர்வில் 528 (கேஐஓடி) மாணவர்களும், 35 (கே.பி.பி.எஸ்) மாணவர்களும் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி.எஸ்.எஸ். சீனிவாசன் மற்றும் நாலெட்ஜ் மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஸ்டீபன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினார். மேலும், கார்த்திக் ராஜா மேனேஜர் யுஆர்டிசி, மற்றும் சுந்தரராஜன் டைரக்டர் டெக்னாலஜி எக்ஸ்சலன்ஸ் குரூப், க்யூஎஸ்ட் குளோபல் பெங்களூர், மேலும் சங்ககிரி டெபுடி ஜெனரல் மேனேஜர், தி இந்தியா சிமெண்ட்ஸ் டிமிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன், மெக்கானிக்கல் துறையின் பேராசிரியர் ராஜேஸ்குமார் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினர். இத்துடன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: