சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 நபர்களுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை: திட்ட இயக்குநர் கே.கவிதா, வழங்கினார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      சேலம்
3 a a

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (27.03.2017) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது. தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தை சேர்ந்த 4 நபர்களுக்கும், சேலம் வட்டத்தை சேர்ந்த 3 நபர்களுக்கும் என மொத்தம் 7 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 457 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி உடனடி தீர்வுகான உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: