முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனா எம்.பி.க்கு விமான நிறுவனம் விதித்த தடைக்கு மத்திய அரசு ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பூனே - மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானா பாத் மக்களவைத் தொகுதியின் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் அண்மையில் புனேவில் இருந்து டெல்லி செல்லும் சாதாரண ரக விமானத்தில் ஏறினார். அப்போது தனக்கு உயர் வகுப்பு இருக்கை தர வேண்டும் என்று கோரி தகராறில் ஈடுபட்டார். டெல்லி வந்திறங்கியதும் அவரை சமாதானப்படுத்த முயன்ற ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால் தாக்கினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யடுத்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் உள்ளிட்ட 6 விமான நிறுவனங்கள், கெய்க்வாட்டை தங்களது விமானங் களில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என அவருக்கு தடை விதித்தன.

மத்திய அமைச்சர் காட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி, ‘‘சட்டம் அனைவருக்கும் சமம். ஒரு எம்.பி. இப்படி மோசமாக நடந்து கொள்வார் என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. வன்முறை எந்த வடிவில் எழுந்தாலும் அது விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அழிவைத் தேடித் தரும். எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த செய்கைக்கு ஆதரவு அளிக்காது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago