முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாபாரதம் தொடர்பான சர்ச்சை கருத்து : நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

மைசூரூ  - மகாபாரதம் தொடர்பாக சர்ச்சைக் குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக கர்நாடக மடாதிபதி தெரிவித்துள்ளார்.  நடிகர் கமல்ஹாசன் அண்மை யில் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், மகாபாரதத்தை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பசவேஸ்வரா மடத்தின் மடாதிபதி பிரனவானந்தா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:

மன்னிப்பு கேட்கவில்லை
கோடிக்கணக்கான இந்துக் கள் புனித நூலாக கருதும் மகாபாரதத்தை நடிகர் கமல்ஹாசன் அவமதித்துவிட்டார். இதன்மூலம் இந்துக்களின் கடவுளை இழிவுபடுத்தி உள்ளார். இதற்கு முன்பும் பலமுறை அவர் இந்து மதத்தைக் கேலி செய்துள்ளார். இதற்காக அவர் 3 நாட்களுக்குள் மன்னிப்புக் கோர வேண்டும் என கெடு விதித்து இருந்தேன். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

வழக்குப் பதிவு செய்ய மனு
எனவே கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் நேற்று முன்தினம் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரக்கோரி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன். இதுதவிர, இந்திய தண்டனை சட்டம் 153-ஏ, 295-ஏ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடக மடாதிபதியின் புகாரை அடுத்து பெங்களூரு போலீஸார் கமல்ஹாசன் பேட்டி அடங்கிய வீடியோ ஆதாரங்களைச் சென்னை போலீஸாரிடம் கோரியுள்ளனர். அதை ஆராய்ந்த பிறகே வழக்குப் பதிவு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago