முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாநிலங்களில் நாளை முதல் ஸ்டிரைக்: 30 லட்சம் லாரிகள் ஓடாது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, வாட் வரியை உயர்த்தியது,பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து தென்னிந்திய அளவில் நாளை முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் சுமார் 30 லட்சம் லாரிகள் இயங்காது.

வாகனங்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு அதிகரித்தது. 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்க உத்தரவிட்டிருப்பது, தமிழகத்தில் வாட் வரியை உயர்த்தி பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியது ஆகியவைகளை கண்டித்து லாரிகள் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று தென்னிந்திய லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனையொட்டி நாளைமுதல் தென்னிந்தியாவில் லாரிகள் ஓடாது. இதனால் 30 லட்சம் லாரிகள் இயங்காது.

6 மாநிலங்கள்:

தமிழ்நாடு, புதுவை, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் லாரிகள் நாளைமுதல் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
இதுகுறித்து குமாரசாமி மேலும் கூறியதாவது:-

4.5 லட்சம் லாரிகள்:-

நாளை முதல் (30-ம் தேதி) தென்னிந்தியா முழுவதும் லாரிகள் ஓடாது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் இரும்பு பொருட்கள், மஞ்சள், துணி வகைகள், உணவு பொருட்கள் தேங்கும். தினமும் ரூ.ஆயிரத்து 500 கோடி வரை பாதிப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.200 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். வடமாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரம் லாரிகள் நேற்றுமுன்தினமே  நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய-மாநில அரசுகள் எங்கள் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தும்வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும். இந்த போராட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு தலைமையில் மாவட்டம் மற்றும் தாலுகாக்களை சேர்ந்த 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள்  பங்கேற்கும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த லாரிகள் ஸ்டிரக்கையொட்டி நேற்றுமுன்தினம் முதலே வடமாநிலங்களுக்கு செல்ல புக் செய்வதை நிறுத்திவிட்டோம். இதனால் மேற்கவங்காளம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்  இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ரூ. ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் இப்போதே தேங்க ஆரம்பித்துள்ளது என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜண்டுகள் சம்மேளன மாநில தலைவர் வடிவேல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்