முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- விவசாயம் இல்லாமல் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைமத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது.டெல்டா விவசாய பகுதிகளில் முக்கியமான பகுதியாகவும், செழிப்பான பகுதியாகவும் இருப்பது புதுக்கோட்டை மாவட்ட விவசாய நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய முக்கியத்துவம்வாய்ந்த இந்நிலங்களில், பூமிக்கு அடியில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து நெடுவாசல் விவசாய மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்த போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் ஆதரவளித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மத்திய- மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகுகடந்த 9-ம் தேதி தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.'ஹைட்ரோகார்பன் திட்டத்தை, மக்களின் அனுமதி இல்லாமல்செயல்படுத்த மாட்டோம்” என்று கூறிவிட்டு தற்போது அதற்கு அனுமதி அளித்து டெல்லியில் நேற்று கையெழுத்தானது நெடுவாசல் மக்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழக அரசின் ஒப்புதலோடு இதை நிறைவேற்றுவதாக இருந்தாலும், அந்த பகுதி மக்கள் இதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கவேண்டும்.மீண்டும் இந்த திட்டத்தை எதிர்த்து சமத்துவ மக்கள் கட்சியின் சகோதரர்கள் போராடுவார்கள். விவசாயத்தின் நன்மைகளை புரிந்துகொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம், விவசாயத்தை காப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்