முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஓட்டுப்போட 18 வயது தேர்தலில் போட்டியிட 25 வயது என்பது முரணாக உள்ளது என வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆர்.கே.நகர் தொகுதியில் மகாகவி பாரதியார் மக்கள் கட்சி சார்பில் சுயேச்சை வேட்பாளராக சவும்யா (23) மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தேர்தல் விதி முறைப்படி 25 வயது பூர்த்தி ஆனவர்கள் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறி அவரது மனுவை நிராகரித்து விட்டனர்.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஹேகர் தலைமையிலான பெஞ்ச் முன்பு வழக்கறிஞர் மயிலை சத்யா முறையிட்டார். ஓட்டுப்போட 18 வயது தேர்தலில் போட்டியிட 25 வயது என்பது முரணாக உள்ளது. 1988-ல் சட்ட திருத்தம் மூலமாக ஓட்டு போடும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தனர். அப்போதே தேர்தலில் போட்டியிடும் வயதையும் 18 ஆக்கி இருக்க வேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கும் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும்.சவும்யாவின் வேட்பு மனுவை ஏற்க வேண்டும். அதுவரை இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதையடுத்து சவும்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்