முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத் இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை   - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் இருவர் நியமிக்கப்படுவதாக, அ.தி.மு.க அம்மா தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க அம்மா தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வடசென்னை வடக்கு மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக, மதுரை புறநகர் மாவட்ட கழக அவைத் தலைவரும், முன்னாள் கழக அமைப்புச் செயலாளருமான  எஸ்.என். ராஜேந்திரன், கழக புரட்சித்தலைவி பேரவை முன்னாள் செயலாளர் டி.ஆர். அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்