உ.பி. மேல்சபை தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      அரசியல்
Akhilesh-Yadav-4 low res

லக்னோ, உத்தரப்பிரதேச மாநில சட்டசபை மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் கூட்டுக்கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. அப்போது சட்டசபை மற்றும் மேல்சபையின் எதிர்க்கட்சியான சமாஜ்வாடியின் ஒருங்கணைந்த  தலைவராகவும் அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கூட்டத்திற்கு பின்னர் இதை கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி தெரிவித்தார்.

கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களான அஜம்கான், சிவபால் சிங் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அகிலேஷ் யாதவின் சித்தப்பாதான் சிவபால் சிங். மாநில மேல்சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் இருக்கிறார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே அகிலேஷ் யாதவுக்கு வழங்கப்பட்டது. அதன்படி சட்டசபை எதிர்க்கட்சி சமாஜ்வாடி கட்சி தலைவராக ராம் கோவிந்த் செளத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: