முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா வேட்பாளர் தினகரனை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பிக்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க அம்மா வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை விவரங்களை எடுத்துக்கூறி, தொப்பிச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி 40-வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள்  ஆர்.பி.உதயகுமார்,  ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளையும், தி.மு.க.வின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் வீடுவீடாக எடுத்துரைத்து, கழக வேட்பாளர்  டி.டி.வி.தினகரனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யும் வகையில், கழகத்தினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்.கே. நகர் தொகுதி 39 மற்றும் 40-வது வட்டங்களுக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் அமைச்சர்  சேவூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர், அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூறி, தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஆர்.கே. நகர் தொகுதியில் கழக வேட்பாளர்  டி.டி.வி.தினகரனை ஆதரித்து, தொகுதிக்குட்பட்ட திலகர் நகர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் வி.சரோஜா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் தலைமைக் கழகப் பேச்சாளர்  நாஞ்சில் சம்பத், தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி தொப்பி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. நகர் பகுதியில், பெண்கள் வீடுவீடாகச் சென்று, அம்மாவின் சாதனைகளை எடுத்துக்கூறி, கழக வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அத்துடன், திண்ணைப் பிரச்சாரமும் மேற்கொண்டு தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஆர்.கே. நகர் தொகுதியில், அ.தி.மு.க அம்மா சார்பில் தேர்தல் பணிமனை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் தொகுதிக்கு உட்பட்ட 34-வது வட்டம், குமரன் நகர் பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அப்பகுதி மக்களை சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

38- வது வட்டத்திற்குட்பட்ட நேருநகர், கிருஷ்ணன் கோயில் தெரு, கொருக்குப் பேட்டை, ரயில்வே லயன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக பாசறை மாநிலச் செயலாளர்  பா. குமார் எம்.பி., கழக நிர்வாகிகளுடன் வீடு வீடாகச்சென்று தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 47-வது வார்டுக்குட்பட்ட ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு, காவல்நிலையப் பகுதி, மார்க்கெட் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக நாடாளுமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீடுவீடாகச் சென்று, கழக வேட்பாளர்  டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகரின் பல்வேறு பகுதிகளில், கழக தேர்தல் பொறுப்பாளர்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச்சென்று தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நேதாஜி நகர் 3-வது தெருவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர்  டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகளுடன் சென்று, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும், பிரசுரங்கள் வழங்கியும், தொப்பி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்