முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

25 விக்கெட்டுகள் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 63 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியது இந்த தொடரில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். 2 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

2-வது முறையாகும் ...

டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றுவது 2-வது முறையாகும். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஜடேஜா 5 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தமிழக வீரர் அஸ்வின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 5 விக்கெட்டுக்கு மேல் ஒரு ஆட்டத்தில் எடுத்துள்ளார். 41 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது இந்த தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். மற்ற இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவ் 17 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த டெஸ்ட் தொடரில் தான் அதிகமான விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக 2011-12-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் 14 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்