முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிஎஸ்டி துணை மசோதாக்களை பார்லி.யில் ஏகமனதாக நிறைவேற்ற ஜெட்லி விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சரக்கு மற்றும் வரி விதிப்பு தொடர்பான 4 துணைமசோதாக்களை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்ற மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்த 4 துணை மசோதாக்கள் குறித்து அருண் ஜெட்லி விளக்கினார். மேலும் இந்த துணை மசோதாக்கள் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற வேண்டும் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விரும்புகிறார் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் ஆனந்த குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்திய இறையாண்மையின் பகிர்மானத்துடன் இந்த 4 வரி சீர்திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் இந்த 4 துணை மசோதாக்கள் வடிவமைக்கப்பட்டன என்று கூறினார். இந்த கவுன்சிலில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

2 சதவீதம் அதிகரிக்கும்:

எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, நஷ்டஈடு வழங்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தொடர்பாக விரிவான முறையில் விளக்கப்பட்டது. இந்த துணைமசோதாக்களை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்ற மத்திய அரசு விருப்புகிறது. இதை கூட்டத்திலும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமுலுக்கு வரும். இதனால் ஒரே தேசம் ஒரே வரி விதிப்பு முறை என்ற நிலை ஏற்படும். மேலும் தேசத்தின் மொத்த வருவாயில் 2 சதவீதம் அதிகரிக்கும் என்றும் குமார் மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago