முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகமே பாராட்ட பணியாற்றுங்கள்: எம்ஆர்எப் விழாவில் வேலூர் மாவட்ட அரசு இணை இயக்குனர் பெரியசாமி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

இந்தியரை உலகமே பாராட்ட பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தி எம்ஆர்எப் விழாவில் வேலூர் மாவட்ட அரசு இணை இயக்குனர் பெரியசாமி தொழிலாளர்கள் மத்தியில் வலியுறுத்தி பேசினார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் திருத்தணி இரு நகரங்களுக்கு இடையே எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அமைந்து உள்ளது. இந்த தொழிற்சாலையில் 46வது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாதுகாப்பு அதிகாரி தினகரன்தாமஸ் வரவேற்று பேசினார். ஆலை பொதுமேலாளர் கேவிஎஸ்.ரவிபிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். உற்பத்தி மேலாளர் இசக்கிராஜன், மனிதவள மேம்பாட்டு துறை அலுவலர் என்ஆர்.மணி, துணை பொது மேலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் வேல்முருகன், வேலூர் மாவட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார அறுவை மருத்துவர் கவிப்;ரியா, ஆகியோருடன் வேலூர் மாவட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வி.பெரியசாமி பேசினார் அவர் பேசிய போது. தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் இதன் மூலம் உலகமே பாராட்டி பேசவேண்டும். அதே நேரத்தில் தொழிற்சாலையின் தரம் நெ-1 ஆக உயரும்;. மின்சார பணிகளில் உங்கள் கவனம் அதிகம் வேண்டும். நம்மில் ஆண் 50கிலோ, பெண் 30கிலோ வரையிலான எடை பொருட்களை தூக்க சட்டம் அனுமதி தந்துள்ளது. ஆனால், அதற்குமேல் இயந்திரம் பல டன் வரையில் தூக்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழிலாளர்களாகிய நீங்கள்; 8மணி நேரத்தில் நான்கரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் பேசினார். சட்டம் சிபாரிசு செய்திருக்கிறது. எனவே, பாதுகாப்பு மிக மிக முக்கியம் மறந்து விடாதீர்கள் என்றும் பேசினார். நிகழ்வில் பாதுகாப்பு கமிட்டி தலைவர் ஜோஸ்அல்போன்ஸ், ரோசிஜாய், நந்தபிரகாஷ், தொழிலாளர் நல சங்க தலைவர் ராசேந்திரன், குட்டிபாபு, மக்கட் தொடர்பு அலுவலர் ரவிக்குமார், உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் ஒருமாத கால பாதுகாப்பு தின கொண்டாட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டன. இறுதியில் கார்;திக் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்