முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கவும், நீர் வழித்தடங்களில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக பராமரிக்கவும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ஆழ்துளாய் கிணறுகள், நீர் நிலையங்கள் ஆகியவைகளை சரியான முறையில் குளோரின் மற்றும் தூய்மை செய்யும் பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதையும், அனுமதியின்றி மின்மோட்டார் உபயோகப்படுத்துவதை கண்காணித்திடவும் வருவாய்த்துறையில் வட்டாட்சியர்கள் மற்றும் வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர்கள் கொண்டு 48 ஊராட்சியில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்கண்ட அலுவலர்களுக்கு 7 முதல் 10 ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊராட்சியில் உள்ள குடிநீர் விநியோகம் குறித்து தினந்தேறும் நேரடி தணிக்கை செய்து, நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

நடவடிக்கை

 

மேலும், உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) எஸ்.மீனாட்சிசுந்தரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சி.இராஜேந்திரன் அவர்களை கொண்ட குழு அரியலூர் ஊராட்சி ஒன்றியம், மணக்கால் கிராமத்தில் அனுமதி இன்றி மோட்டார்களை கொண்டு நீர் உறிஞ்சியதாக 3 மின்மோட்டார்களும், சுப்பராயபுரம் கிராமத்தில் 3 மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மாவட்ட அளவில் குடிநீர் விநியோகம் குறித்து அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கட்டுப்பாட்டு அறை மற்றும் குழுவினர்களுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்