முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான மாதாந்திர மற்றும் காலாண்டு முடிவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கிகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விவசாயக்கடன், தொழிற்கடன், முதியோர் உதவித்தொகை, தாட்கோ கடன்தொகை, கால்நடை பராமரிப்பு வளர்ப்புக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள். சிறு, குறு தொழில் கடன்கள் போன்ற பல்வேறு கடன்கள் பொதுமக்களுக்கு அரசு மூலம் மான்யத்துடன் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள் கடன் உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய புள்ளி விவரங்கள் மற்றும் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு அரசின் மான்யத்துடன் கூடிய கடன் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்க வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அவற்றில் தற்போது எய்துள்ள இலக்குகள் நிலுவையிலுள்ள கடன் இலக்குகள் பற்றி ஒவ்வொரு வங்கிகள் வாரியாக கேட்டறிந்து அவற்றில் உள்ள பிரச்சனைகளை கலைந்து விரைவாக அரசின் நலத்திட்ட கடன் உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டுமென்று மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் வங்கியாளர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறை நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் வங்கிகளிடமிருந்து பெறுவதில் பயனாளிகளுக்கு நிலவும் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட வங்கியாளர்களிடம் நேரடியாக தெரிவித்து அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டனர்.வங்கியாளர்களுக்கான மாதாந்திர மற்றும் காலாண்டுஇந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் என்.பாபு, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மொரீரா, முன்னோடி வங்கிகளின் மேலாளர் தாமோதரன். சென்னை நபார்டு வங்கி மேலாளர் இ.ராஜீ மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்