தருமபுரி கோ-ஆப்டெக்ஸில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      தர்மபுரி
tmp

 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி விற்பனையை பெருக்கி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக 2017 மார்ச் மாதம் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டத்தின் மூலம் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை விற்பனை செய்யப்பட்டது. இத்திட்டம் 22.02.2017 முதல் 28.03.2017 வரை விற்பனை நடைபெற்று வந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப காஞ்சிபுரம் பட்டு புடவைகள், மென்பட்டுப்புடவைகள், எல்லோருக்கும் பட்டு, கலாச்சாரப்பட்டு மற்றும் கோரா புடவைகள், காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் நேர்த்தியான கலர்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில்க் ரெடிமேட் சர்ட், ஜெயகார்த்திகா காட்டன் சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், டர்க்கி டவல், குர்த்தீஸ், ஏற்றுமதி இரகங்கள் மற்றும் அழகிய வடிவமைப்பில் படுக்கை விரிப்புகள், போர்வைகள், ஜமக்காளங்கள், திரைச்சீலைகள், சுடிதார், நைட்டிகள், ரெடிமேட் சர்ட்டுகள், தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மிக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. இதனை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான இரகங்களை வாங்கி பயன் பெற்றனர். குறிப்பாக அனைத்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் இரண்டு புடவைக்கு விலை கொடுத்து மூன்றாவது புடவைகளை இலவசமாக பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சில வாடிக்கையாளர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மேலும் 3 தினங்களுக்கு அதாவது 31.03.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: