முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்தாதிரிப்பேட்டை பெண் தீக்குளித்து பலி: இன்ஸ்பெக்டர்-சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      சென்னை

சிந்தாதிரிப்பேட்டை பெண் தீக்குளித்து பலியான சம்பவத்தையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் பட்டியல்

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பத்மாவதி என்ற பெண், போலீசார் மிரட்டியதாக கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மீது இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டது. ரவுடிகள் பட்டியலில் உள்ள மோகனின் வீட்டுக்கு போலீசார் விசாரணைக்கு சென்ற போது மிரட்டல் விடுத்த காரணத்தாலேயே பத்மாவதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.பத்மாவதியின் மகள் பிரியங்கா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago