முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், பல்லடம் சாலை தென்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு  எதிரான  விழிப்புணர்வு  பேரணியினை  மாவட்ட  கலெக்டர்   ச.ஜெயந்தி   கொடியசைத்து  தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.                

                திருப்பூர் பல்லடம் சாலை, தென்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு  எதிராக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியினை மாவட்ட கலெக்டர்  கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் பதாகைகளை ஏந்திவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும்  பேரணியில் தென்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர்கள், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி மாணவியர்கள்,  குமரன் கல்லூரி மாணவியர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது, தென்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடங்கி பல்லடம் சாலை வழியாக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தை வந்தடைந்தது.

               இப்பேரணியில், உதவி ஆணையர் (கலால்) ஆர்.சாந்தாதேவி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் மரு.விஜயகுமார், மதுவிலக்கு காவல்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்