முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல் தொடர்பான கருத்தரங்கு கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,  உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல் மற்றும் இணையதள சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஏப்ரல் 1 முதல் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 6.70 இலட்சம் ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1-ம்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மாவட்டந்தோறும் வழங்கப்படவுள்ள விபரம் தெரிவிக்கப்படும். இக்கருத்தரங்கில் இத்துறையின் வளைதளமான றறற.வnpனள.பழஎ.in பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைக்காக பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணைதளம் மூலம் இச்சேவைகளை தாங்களாகவே இலவசமாக செய்து கொள்ளலாம்.

இச்சேவையில் உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், அட்டை ஒப்படைத்தல் / ரத்து, அட்டை வகை மாற்றம், குடும்ப அட்டை முடக்கம், குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றும், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகியவற்றினை மேற்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரார்களுக்குரிய ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் ஆனதும் அவர்களது அலைபேசி எண்ணிற்கு Pin ரேஅடிநச வரும். இதனை அழித்திடாமல் ஸ்மார்ட் கார்டு பெறப்படும் இடத்திற்கு செல்லும்போது தங்களது ஆதார் அட்டை, பழைய குடும்ப அட்டை மற்றும் Pin ரேஅடிநச வரப்பெற்ற அலைபேசியுடன் சென்று ஸ்மார்ட் கார்டினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஸ்மார்ட் கார்டு பெறுவது தொடர்பாக இக்கருத்தரங்கில் பங்குபெற்றுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொதுமக்களிடையே போதுமான அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இக்கருத்தரங்கில் பங்குபெற்றுள்ள மகளிர் திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் கிராமப்புறங்களில் பொதுமக்களிடையே ஸ்மார்ட் கார்டு பெறுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். மேலும் இப்பணிகளை துறை அலுவலர்களும், மகளிர் திட்ட பணியார்கள், நுகர்வோர் பாதுகாப்பு குழுவினரும், தொண்டு நிறுவனங்களும், மாணவ, மாணவியர்களும் ஆகியோர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட வழங்கல் அலுவலர் டி.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் ம.மோசஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஜெயராஜ்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மகளிர் திட்ட தொகுப்பு ஊதிய பணியாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சி.என்.சி, வாசவி, கொங்கு வேளாளர், அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், கூட்டுறவு துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago