முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது.

                             110 மாணவர்கள்

ஊட்டியருகேயுள்ள ஓடைக்காடு பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் நல்லாசிரியர் விருது பெற்ற ஷோபா. இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றது முதல் இப்பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக முன்னேற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் 15 மாணவர்களே இருந்த நிலையில் தற்போது 110 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை ஷோபா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கேட்ராஜ், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மந்தேஷ்குட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                                 முக்கியஸ்தர்கள்

விழாவில் இன்னர்வீல் சங்கத்தைச் சேர்ந்த மல்லிகா, விமலா ராமசுப்பிரமணி, ஆடிட்டர் ராமசுப்பிரமணி, ஸ்டெர்லிங் பயோடெக் மேலாளர் மனோகரன், தனி அதிகாரி மகாலிங்கம், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த தேசிங்குராஜன், தெற்கு வனச்சரகர் ராஜேஷ், மக்கள் சட்டமைய இயக்குநர் வக்கீல் விஜயன், மகாலிங்கம் ரவி, விஷால் கவுடா, ஜே.சி சங்கத்தைச் சேர்ந்த பிரவீண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ராதா தொகுத்து வழங்கினார்.

                  கலைநிகழ்ச்சிகள்

விழாவில் இப்பள்ளியில் படிக்கும் 110 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்