முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி வகுப்பினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இளைஞர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு - 2017-னை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள் - 2 ஆகிய தேர்வுகள் 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய தினங்;களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியினை இலட்சியமாக கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி வகுப்பில் மொத்தம் 160 இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து பங்கேற்றுள்ளனர்.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள் - 2 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.  குறிப்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், சமூகஅறிவியல் , குழந்தை வளர்ச்சி மற்றும் ஆசிரியர் பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இப்பயிற்சி வகுப்பானது வாரம் ஏழு நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வினை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் மு.அபுபக்கர் சித்திக், பயிற்றுநர் மாதவன் உள்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்