முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டர் விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:நுகர்வோர் கூட்டத்தில் கோரிக்கை

புதன்கிழமை, 29 மார்ச் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி வரவேற்று பேசினார். இதில் நுகர்வோர்கள் பேசுகையில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜெண்சிதாரர்கள், கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய ஆட்களை வைத்துள்ளனர். அவர்கள் நகர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்கின்றனர். ஆனால் கிராமப்புறத்தில் மட்டும் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிப்பது கிடையாது. அனைவரும் ஒரே கட்டணத்தில்தானே செலுத்துகின்றனர். எனவே கிராமப்பகுதிகளிலும் கேஸ் சிலிண்டரை நுகர்வோர் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்லில் கேஸ் சிலிண்டரின் விலை, மான்யத் தொகை எவ்வளவு என்பதை தெளிவாக தெரியும்படி அச்சிட வேண்டும். மேலும் சிலிண்டர் விநி«£கிக்க வருபவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றனர். இதற்குபதிலளித்த அதிகாரிகள் அடுத்த மாதம் கேஸ் நுகர்வோர் குறைதீர்வு கூடடத்தின் கேஸ்சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான கட்டணம் நிர்ணயம செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இனி நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்லில் சிலிண்டர் விலை, டெலிவரி கடடணம் ஆகியவை அச்சிட்டு வழங்கப்படும். அதில் உள்ள தொகை மட்டும் செலுத்தினால்போதும் என தெரிவித்தனர். கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்கள் கேஸ் ஏஜெண்சி தாரர்கள், நுகர்வோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்