முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் வருகிற 2 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது: ஆணையாளர் க.இரா. செல்வராஜ் தகவல்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      சேலம்

சேலம் மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் 02.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இம்முகாம் மூலம் மாநகர பகுதிகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 85 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார மையம் , மாநகராட்சி மருந்தகம் , துணை சுகாதார நிலையம் , சத்துணவு மையம் , பள்ளிகள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என மொத்தம் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிசைபுற பகுதிகள் , சாலையோர வாழ்மக்கள் வசிக்கும் பகுதிகள் , நாடோடிகள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளில் மருத்துவ அலுவலர்கள் , மருத்துவ பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என மொத்தம் 1200 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக 25 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 85 ஆயிரம் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2004 – ஆம் ஆண்டு முதல் போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் இந்நோய் வராமல் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஓத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க. இரா.செல்வராஜ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்